Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1575-சொன்னபடி உயிர்த்தெழுந்தார் உயிர்ப்பு
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சொல் தவறா நம் இயேசு (2)
அல்லேலூயா ஆனந்தமே - அன்பர்
இயேசு உயிர்த்தெழுந்தார் (2)

சாவே உன் வெற்றி எங்கே
சாவே உன் கொடுக்கு எங்கே (2)
சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது - 2
சகல அதிகாரம் நமக்கு உண்டு

விண்ணும் ஒழிந்து போகும்
மண்ணும் மறைந்து போகும் (2)
ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும் - 2
அழியாதது மாறாதது

கிறிஸ்து உயிர்த்ததினால்
நாமும் உயிர்த்தெழுவோம் (2)
ஆண்டவர் வருகை சீக்கிரமன்றோ - 2
அபிசேகம் பெற்று காத்திருப்போம்
 

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் - ஆதிசாவினை ஜெயித்தெழுந்தார்