Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1574-சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது உயிர்ப்பு
சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
இயேசு உயிர்த்தார் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

விதைக்கப்படுவது அழிவுக்குரியது
உயிர்த்து எழுவது அழியாதது
உடைக்கப்பட்டதோ வலுவற்றது
உயிர்த்து எழுவதோ வலுவானது
மண்ணில் விழுந்து மடியும் விதைகள்
எழுந்தபோது தருமே பலன்கள் - அல்லேலூயா

அழிவின் பாதைகள் சாவு மேடுகள்
அன்பின் ஆட்சிகள் உயிர்ப்பின் வாசல்கள்
பாவம் என்பது இருண்ட மேகங்கள்
திருந்தி வாழ்வது நீலவானங்கள்
பாவம் மறந்து பாதை திருத்து
உயிர்ப்பு வாழ்வே நமது விருந்து - அல்லேலூயா

மனித வாழ்வுகள் சிறிது காலங்கள்
அன்புப்பாதையில் நடந்து வாழுங்கள்
துன்பம் என்பது நீரின் குமிழிகள்
தொடர்ந்த போதிலும் சுமந்து வாருங்கள்
இருக்கும் வரைக்கும் சுமந்தே செல்வோம்
உயிர்ப்பு வாழ்வில் இறறக்கி வைப்போம் - அல்லேலூயா


 

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் - ஆதிசாவினை ஜெயித்தெழுந்தார்