புனிதவாரப்பாடல்கள் | 1573-எழுந்தார் நாதன் | உயிர்ப்பு |
எழுந்தார் நாதன் சாவை வென்றே எளியோர் எமக்கே உயிர் தரவே ஐந்திருக்காயங்கள் அன்புடன் துலங்க ஐயமின்றி அவர் உயிர்த்தெழுந்தார் உறை இருள் அகற்றும் உதயவன்போலே உர விசுவாசம் எமக்களித்தார் மகிமை பெற அவர் தேவ பிதாவும் மகிழ அவர் தாய் மரி மனமும் பாவம் அகற்றித் தன் பரம பிதாவின் பிள்ளைகளாய் எம்மைப் பாராட்டி பாஸ்கா பலியதில் பங்கு கொள்ளும் நாம் பரம விருந்தில் அமர்ந்திடுவோம் |