Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1571-உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்ப்பு

உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்
இரவினைத் துரத்திடும் கதிரவன் போல்
சாவினை வென்றிங்கு உயிர்த்தெழுந்தார்
அல்லேலூயா ஆனந்தமே - 4

பாறை பிளந்திடும் அனல் பிளம்பாய்
கல்லறை திறந்தே உயிர்த்தெழுந்தார் (2)
விண்ணக வாயிலும் திறக்கின்றதே - 2
இறைவன் அரசிங்கு தொடர்கின்றதே
தீமைகள் விரட்டிட எழுந்திடுவோம் - நம்
அன்பின் போர்களை தொடர்ந்திடுவோம் (2)
வெற்றி நமதென முழங்கிடுவோம்
இயேசுவின் உயிர்ப்பை மலரச் செய்வோம்
அல்லேலூயா ஆனந்தமே - 4

மானிட வாழ்க்கையின் கொடு முடியால்
மாபரன் இயேசுவே உயிர்த்தாரே (2)
போரிடும் ஏழைகள் ஆற்;றலுமாய் - 2
செல்வரின் செருக்கினை உடைத்தாரே
சோர்ந்திடும் வறியவர் நம்பிக்கையே - இன்று
விடியலின் விளக்காய் துலங்கிடுதே (2)
உண்மை நிலையாய் ஆள்கின்றதே
அன்பில் நீதியும் கனிகின்றதே
அல்லேலூயா ஆனந்தமே 4
 

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் - ஆதிசாவினை ஜெயித்தெழுந்தார்