புனிதவாரப்பாடல்கள் | 1570-உயிர்த்தெழுந்தர் எங்கள் இயேசு | உயிர்ப்பு |
உயிர்த்தெழுந்தர் எங்கள் இயேசு ஜெயித்தெழுந்தார் எங்கள் இயேசு (2) மனுக்குலமே மகிழ்ந்திடுவாய் இறைவன் உயிர்ப்பிலே இணைவோம் புதிய உறவிலே பொய்மையை அழித்து மெய்மையை நிறுத்தி இறைவன் உயிர்த்து எழுந்தார் சுமைகளைக் களைந்து சுகங்களைப் பொழிந்து உரிமை வாழ்வு தந்தார் விண்ணக வாழ்வை உலகம் பெறவே மண்ணகம் மரித்தார் (2) அன்பின் இறைவன் இவரே இவரே உண்மை இறைவன் இவரே இவரே இறைவனின் வார்த்தை உலகினில் என்றும் நிலைத்த வாழ்வு தருமே அனுதின வாழ்வில் உறவினைத் தரவே இறைவன் இயேசு எழுந்தார் புதியதோர் ஒளியை உலகம் பெறவே இறைமகன் உயிர்த்தார் (2) உண்மை இறைவன் இவரே இவரே அன்பின் இறைவன் இவரே இவரே |