Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1569-உயிர்ப்போம் உயிர்ப்பு


உயிர்ப்போம் - 3
உண்மை இறைவனில் உயிர்ப்போம் (2)
நிலைப்போம் - 3
நன்மை செய்வதில் நிலைப்போம் (2)

வாழ்வு தருகின்ற வார்த்தையாய் உயிர்ப்போம்
வறுமை போக்கிட வளமையாய் உயிர்ப்போம் (2)
பிரிந்த மனங்களை இணைத்திட உயிர்ப்போம் - 2
விரிந்த இதயமாய் வாழ்ந்திட உயிர்ப்போம்
வார்த்தையாய் உயிர்ப்போம் வளமையாய் உயிர்ப்போம்
இணைந்திட உயிர்ப்போம் வாழ்ந்திட உயிர்ப்போம்

உயிர்ப்பின் மாண்பினை முழங்கிட உயிர்ப்போம்
உரிமை வாழ்வினை வழங்கிட உயிர்ப்போம் (2)
உலகின் ஒளியாய் வழியாய் உயிர்ப்போம் - 2
உண்மை அன்பின் சாட்சியாய் உயிர்ப்போம்
முழங்கிட உயிர்ப்போம் வழங்கிட உயிர்ப்போம்
வழியாய் உயிர்ப்போம் சாட்சியாய் உயிர்ப்போம்

 

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் - ஆதிசாவினை ஜெயித்தெழுந்தார்