புனிதவாரப்பாடல்கள் | 1566-ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் | உயிர்ப்பு |
ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் - ஆதி சாவினை ஜெயித்தெழுந்தார் - இந்த மண்ணையும் வென்றெழுந்தார் - எங்கள் ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் விண்ணையும் மண்ணையும் இணைத்து வைத்தார் (2) - மீண்டும் தந்தையின் உறவில் சேர்த்து வைத்தார் உடலை அடக்க உதவி இன்றி உழலும் மனிதா உண்மை கேட்பாய் உயிர்த்த யேசு உனக்கு வழங்கும் உயிரைக் கொண்டே உடலை ஜெயிப்பாய் இதுவே வீரம் இதுவே வெற்றி இதுவே வாழ்வு இதுதான் வாழ்வு வாழ்க்கையிலே மகிழ்ந்திடுங்கள் மகிழ்ச்சியிலே மலர்ந்திடுங்கள் வளமுடனே வாழ்ந்திடுங்கள் துணிவுடனே எழுந்திடுங்கள் - எங்கள் உலகின் ஒளியாய் திகழ்ந்து விட்டார் - அந்த ஓளியினில் நமக்கும் பங்கு தந்தார் பாவத்தை வெல்ல மனமே இன்றி பாவத்திற்கடிமை ஆகும் மனிதா உயிர்த்த யேசு உனக்கு கொடுக்கும் உயிர்ப்பின் அருளால் பாவம் ஜெயிப்பாய் |