புனிதவாரப்பாடல்கள் | 1526-சிலுவையே சிவந்தத | குருத்து ஞாயிறு |
சிலுவையே சிவந்ததா திருமகன் சுமந்ததால் இறுதிப் பயணத்தின் தொடக்கம் இதோ குருதி சிந்திடும் தெய்வம் இதோ பலியாகவே பாவம் போக்கவே கல்வாரிப் பாதையில் போகிறார் சாவை நோக்கிப் போகிறார்.. போகிறார் போகிறார் கடவுள் நிலையில் இருந்தவர் அவர்க்கு இணையாயத் திகழ்ந்தவர் தன்னிலை துறந்து வாழ்ந்தவர் அடிமைக் கோலம் பூண்டவர் தந்தைக்குப் பணிந்து சிலுவையை சுமந்து நிந்தையை ஏற்று இன்னுயிர் அளித்து உலகின் பாவங்கள் துடைக்கின்றார் (2) பலியாகவே பாவம் போக்கவே கல்வாரிப் பாதையில் போகிறார் சாவை நோக்கிப் போகிறார் போகிறார் போகிறார் தலையில் பதிந்த முள்முடி தசையில் விழுந்த கசையடி மனதில் படிந்த வசைமொழி மரணத்தீர்ப்பின் பெரும் பழி தந்தையை அழைத்து தம் தலை சாய்த்து மண்ணில் விழுந்த கோதுமை மணிபோல் மடிந்து உயிரைத் தருகின்றார் (2) பலியாகவே பாவம் போக்கவே கல்வாரிப் பாதையில் போகிறார் சாவை நோக்கிப் போகிறார்.. போகிறார். போகிறார். |