Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1523-கிறிஸ்து அரசே இரட்சகரே குருத்து ஞாயிறு
கிறிஸ்து அரசே இரட்சகரே
மகிமை வணக்கம் புகழ் உமக்கே
எழிலார் சிறுவர் திரள் உமக்கு
அன்புடன் பாடினர் ஓசான்னா

இஸ்ராயேலரின் அரசர் நீ
தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்
ஆசி பெற்ற அரசே நீர்
ஆண்டவர் பெயரால் வருகின்றீர்

வானோர் அணிகள் அத்தனையும்
உன்னதங்களிலே உமைப் புகழ
அழிவுறும் மனிதரும் படைப்புகளும்
யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே

எபிரேயர்களின் மக்கள் திரள்
குருத்துக்கள் ஏந்தி எதிர் கொண்டார்
செபமும் கீதமும் காணிக்கையும்
கொண்டு யாம் இதோ வருகின்றோம்

பாடுகள் படுமுன் உமக்கவர் தம்
வாழ்த்துக்கடனைச் செலுத்தினரே
ஆட்சி செய்திடும் உமக்கின்றே
யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்

அவர் தம் பக்தியை ஏற்றீரே
நலமார் அரசே கனிவுடை அரசே
நல்லன எல்லாம் ஏற்கும் நீர்
எங்கள் பக்தியும் ஏற்பீரே


 

ஓசான்னா தாவிதின் புதல்வா
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா