புனிதவாரப்பாடல்கள் | 1522-என் இறைவா என் இறைவா | குருத்து ஞாயிறு |
என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கை நெகிழ்ந்தீர்? என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றனர் உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானேஇ அவர் மீட்கட்டும் அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால் இவனை விடுவிக்கட்டும் என்றார்கள் ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும் அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள் என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள் ஆனால்இ நீரே ஆண்டவரே என்னைவிட்டுத் தொலைவில் போய்விடாதேயும் எனக்குத் துணையான நீர் எனக்கு உதவி புரிய விரைந்து வாரும் |