Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1520-ஆயிரக்கணக்கான வருடங்களாய் குருத்து ஞாயிறு
ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இஸ்ராயேல் ஜனங்களை ஆளவாரும் - எம்
இயேசு இரட்சகரே எழுந்தருளும்

ஓசான்னா தாவிதின் புதல்வா
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா
முனிசூசை கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினிலுதித்தவரே - எம்
மன்னவரே எழுந்தருள்வீரே

தாவீது அரசனின் புத்திரரே - ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமரென புகழ் அடைந்தவரே - எம்
தேவனே தேவனே வருவீரே

அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா
அருள் போதகரால் புகழப்பட்டீர்
ஆகாயங்களை நீர் திறக்கவிட்டீர் - உம்
ஆதிப்பிதாவிடம் பதவி பெற்றீர்

கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்
கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டுவரச் சொன்னீர் தூயதண்ணீர் - அதை
சுத்தரசமாக்கிப் பெயர் அடைந்தீர்

புவியினிற் புரிந்தீர் புண்ணியங்கள் - எம்
புத்தியிற் புகுந்தீர் அருள் மொழிகள்
பக்தியிற் சேர்த்தீர் பல சீடர்கள் - மா
பவனியோடு வாரீர் படைத்தவரே

குருடர்கள் அநேகர் ஒளி பெற்றார் - முடக்
கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார்
குஷ்டர் அதிகமே நலன் பெற்றார்
கடவுளே எம்மோடே வாருமே நீர்

மரித்தவர் பலருமே உயிர் பெற்றார் - ஒரு
மனமுடைந்த விதவை மகன் அடைந்தார்
மரியமதலேன் சோதரன் பெற்றார் - எம்
மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே

யூதேயா நாட்டினில் புகழ் பெற்றீர் - எம்
யூதர் ராசனாய் முடி பெற்றீர்
யெருசலேம் நகர்தனில் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசனே அரசாள்வீர்

பாவிகளைத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் பொறுக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்லுவீரே

உலகமே உமது அரிய வேலை - உம்
உயிருமே உமது மாபுதுமை
உலகத்தை ஆண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே
 

ஓசான்னா தாவிதின் புதல்வா
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா