Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தவக்காலப்பாடல்கள் இதோ புதிய காலம்  


இதோ புதிய காலம் மிகப் புனிதமானது
புதிய வசந்த காலம் தவக் கோலமானது
நெற்றியிலே சாம்பல் சிலுவை சின்னமானது
நெஞ்சத்திலே புதிய வாழ்வு உதயமானது

தன்னை ஒடுக்கிக் கொள்வதும் நோன்பு ஆகுமா
உணவை சுருக்கிக் கொள்வதும் நோன்பு ஆகுமா
சாக்கு உடையும் சாம்பலும் நோன்பு ஆகுமா
காவி உடுத்தி நடப்பதும் நோன்பு ஆகுமா
உண்மை நோன்பு எதுவென்று எழும்பும் கேள்வியோ
அது புனித சாம்பல் புதனென்று தொடங்கும் வேள்வியோ
சிலுவை வழியில் உயிர்ப்பு நோக்கி செல்லும் பாதையோ

பசியைப் போக்க உதவுதல் நோன்பு ஆகுமே
பகிர்ந்து உணவை உண்ணுதல் நோன்பு ஆகுமே
உடுத்தி மகிழச் செய்வதும் நோன்பு ஆகுமே
நேர்மை உண்மை அன்பு தான் நோன்பு ஆகுமே
அன்பர் இயேசு வழிதனில் செல்லும் காலமோ
இது புதிய வாழ்வை மனதினில் பதிக்கும் கோலமோ
புனித வழியில் அன்பை வாழச் சொல்லும் நேரமோ

பழைய பாவச் செயல்களை மாற்றிக் கொள்ளுவேன்
பணிந்து இறைவன் வார்த்தையை ஏற்றுக் கொள்ளுவேன்
பிறரை அன்பில் கனிவுடன் தாங்கிக் கொள்ளுவேன்
புதிய வழியில் நடத்த்டவே உறுதி கொள்ளுவேன்
மனதை மாற்றும் வழியென்று கண்டு மகிழ்கின்றேன்
இனி புதிய வாழ்வை நிறைவுடன் பெற்று மகிழுவேன்




 

தவக்காலம் இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்