தவக்காலப்பாடல்கள் | -வழி மாறி வாழ்விழந்தேன் |
வழி மாறி வாழ்விழந்தேன் - எனை ஏற்றிடுமே மனம் இரங்கிடுமே 1)ஊதாரி மகனாக உரு மாறினேன் தந்தை உன் அன்பினை மறந்தே நின்றேன் 2) தொலைதூரம் திரிந்தேன் தவறு செய்தேன் அளவில்லா அருளினை இழந்தே நின்றேன் 3) தீமைகள் பாவத்தைத் துணிந்து செய்தேன் தீயவர் கூட்டத்தில் சேர்ந்தே விட்டேன் 4) அருள் நிலை இழந்தேன் உன் பிள்ளை என்னும் உரிமையை இழந்தே வாடி நின்றேன் 5) அப்பா உன் அன்பின்றி நான் ஏனய்யா தப்பாமல் மன்னித்தெனை ஏற்பாயா |