Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தவக்காலப்பாடல்கள் 1518-நாள்தோறும் நான் சுமக்கும்  
நாள்தோறும் நான் சுமக்கும் சிலுவைகளே - 2
நான் வாழ எனைத் தடுக்கும் சிலுவைகளே (2)
சிலுவை நாயகன் இயேசுவின் துணையில்
நானும் உங்களை எதிர்கொள்வேன்
சிலுவை நாயகன் இயேசுவின் துணையில்
நானும் உங்களை வென்றுயிர்ப்பேன் - நாள்தோறும்...

அடுத்தவர் நலன் கருதி
நன்மை செய்ய வரும் போது
அடுக்கடுக்காய் வரும் சிலுவைகளே (2)
ஆண்டவன் வழியினிலே நடந்திடும் பொழுதினிலும்
தடுத்துவிழச் செய்யும் சிலுவைகளே (2)
தடுத்துவிழச் செய்யும் சிலுவைகளே
சிலுவை நாயகன்...

நீதி நேர்மையுடன் உழைத்திட வரும்போது
நேர் எதிர் வருகின்ற சிலுவைகளே (2)
உண்மையை புதைத்துவிட்டு உயிர்களைப் பறித்திடும்
வன்முறை சேர்க்கின்ற சிலுவைகளே (2)
வன்முறை சேர்க்கின்ற சிலுவைகளே
சிலுவை நாயகன்...

உறவுகள் உதிர்கையில் நண்பர்கள் பிரிவினில்
சோகத்தில் எனை ஆழ்த்தும் சிலுவைகளே (2)
பகைமையின் சூழலில் தனிமையின் சிறையினில்
நாளும் எனை அழுத்தும் சிலுவைகளே (2)
நாளும் எனை அழுத்தும் சிலுவைகளே
நாள்தோறும்...








 

தவக்காலம் இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்