Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தவக்காலப்பாடல்கள் 1517-மனிதா ஓ மனிதா  

மனிதா ஓ மனிதா - நீ
மண்ணாய் இருக்கின்றாய்
மண்ணுக்கே திரும்புவாய் - 2
நினைவில் வை - 3 ஓ மனிதா

இரக்கத்தின் காலம் இது என உணர்வோம்
இறைவனின் இரக்கம் வேண்டிப் பெறுவோம் (2)
பழையன விடுத்து புதியன புனைவோம் - 2
புனிதத்தில் நிலைத்து புதுப் படைப்பாவோம் - 2

கல்லான இதயம் நமக்கினி வேண்டாம்
கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும் (2)
சாம்பலை அணிந்து செபதவம் புரிந்து - 2
சாவினைக் கடந்து வாழ்வினில் நுழைவோம் - 2








 

தவக்காலம் இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்