Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தவக்காலப்பாடல்கள் 1516-மனிதனே நீ மண்ணாயிருக்கின்றாய்  
மனிதனே நீ மண்ணாயிருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய்
மறவாதே என்றும் மறவாதே மறவாதே

பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கின்றான்

மரணம் வருவதை மனிதன் அறிவானோ
தருணம் இதுவென இறைவன் அழைத்தானோ

மனம் திரும்பினால் பாவம் தொலையுமே
இறைவன் செய்தியை ஏற்று வாழுவோம்







 

தவக்காலம் இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்