Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தவக்காலப்பாடல்கள் 1515-மன்னிப்பவன் தான் மனிதன்  
மன்னிப்பவன் தான் மனிதன் - மன்னித்து
மறப்பவன் மனித தெய்வம்
எண்ணிக்கை இல்லாத நம் பிழையை இறைவன்
மன்னித்து மறந்தாரே - இல்லையேல்
மண்ணில் வாழ்வார் யாரே

சுந்தர மழலைகளை சுட்டெரித்த நெருப்பை
மன்னித்து மறந்து விட்டோம் - நம்
சொந்தங்களை சொத்துக்களை கொண்டுபோன - கொடும்
சுனாமியை மறந்து விட்டோம்
எந்த மனிதன் குற்றம் புரியவில்லை இங்கு
மன்னிப்பு இல்லையேல் மறுவாழ்வில்லை

தன்னைப்போல் அயலாரை அன்பு செய்யும் மாந்தர்
மன்னித்து மறந்திருப்பார் - பிறரை
மன்னித்திட மனமின்றி வெறுப்போர்கள் - தீரா
நோய்களில் உழன்றிருப்பார்
மன்னிப்பவர்க்கே குற்றம் மன்னிக்கப்படும் - என்று
நம்தேவன் யேசு நம்மை மன்னிக்கவே வந்தார்







 

தவக்காலம் இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்