தவக்காலப்பாடல்கள் | 1513-புதிய வாழ்வைத் தேடியே |
புதிய வாழ்வைத் தேடியே உன்னிடம் வந்தேனே உம்திரு வார்த்தை கேட்டதும் என் மனம் நொந்தேனே பாவத்தின் குழியில் நான் வீழ்ந்து நிலை குலைந்து போனேனே உம்திருவார்த்தை கேட்டதும் மனத் திருந்தி நின்றேனே நாளும் பொழுதும் உன்னை மறந்து பாவம் புரிகின்றேன் நாதா உந்தன் நாமம் மங்க தீ வழி செல்கின்றேன் பிறர் மனங்கள் நோகும் வார்த்தைகள் பேசி நளினம் செய்கின்றேன் என் பிழை பொறுத்து என்னை நீ ஏற்று அன்பு செய்தாளுவாய் பிறரின் வாழ்வை இழித்து பேசி காலம் கழிக்கின்றேன் இல்லா பொல்லா கதைகள் பேசி பெயரைக் கெடுக்கின்றேன் உமது வார்த்தை நாடி வாழ நாளும் மறுக்கின்றேன் என் பிழை பொறுத்து என்னை நீ என்றும் அன்பு செய்தாளுவாய் |