தவக்காலப்பாடல்கள் | 1510-தபசு காலம் அழைக்குதைய |
தபசு காலம் அழைக்குதையா மனந்திரும்பு அம்மா மனந்திரும்பு நம்ம எல்லாருக்கும் நல்ல சேதி மனந்திரும்பு சந்தோசமா மனந்திரும்பு (2) இரக்கத்தின் காலமிது மனந்திரும்பு ஐயா மனந்திரும்பு (2) நம்ம இறையரசு நெருங்குதையா மனந்திரும்பு விரைந்து மனந்திரும்பு மன்னிப்பின் காலமிது மனந்திரும்பு அம்மா மனந்திரும்பு (2) உங்க மனசாட்சி குரலை கேட்டு மனந்திரும்பு முழுசா மனந்திரும்பு சாதிவெறிய விட்டு நீயும் மனந்திரும்பு ஐயா மனந்திரும்பு (2) எல்லாம் சமத்துவமா வாழ்ந்திடலாம் மனந்திரும்பு சமத்தா மனந்திரும்பு மதவெறிய விட்டு நீயும் மனந்திரும்பு அம்மா மனந்திரும்பு (2) இங்கு மனுசன்தானே முக்கியமென்று மனந்திரும்பு உணர்ந்து மனந்திரும்பு ஊதாரி மைந்தன் போல மனந்திரும்பு வருந்தி மனந்திரும்பு (2) அந்த நல்ல கள்வன் போல நீயும் மனந்திரும்பு துணிந்து மனந்திரும்பு சக்கேயு செய்தது போல் மனந்திரும்பு திருந்தி மனந்திரும்பு - (2) நல்ல மதலேனம்மா மனது போல மனந்திரும்பு அழுது மனந்திரும்பு |