Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தவக்காலப்பாடல்கள் 1509 -தவக்காலம் இது தவக்காலம்  
தவக்காலம் இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்

இருளின் வாழ்வு கார்காலம் - அது
மறையவேண்டும் போர்க்கோலம் - 2
உறுதி கொள்வோம் நிகழ்காலம் - 2
உதய வாழ்வே எதிர் காலம்

உள்ளும் நிகழும் மாறாட்சி -அங்கு
பாவவாழ்வின் பொருட்காட்சி
களைகள் களைந்து எடுத்திடுவோம் - 2
நிலவும் அன்பின் அரசாட்சி

இடறி விழுவது பலவீனம் - அங்கு
விழுந்தே கிடப்பது மதியீனம்
பாதை காட்டுது கல்வாரி
பயணம் செல்பவன் அறிவாளி







 

இயேசு சிந்திய குருதியினாலே விடுதலை அடைந்தேனே