தவக்காலப்பாடல்கள் | 1508-தந்தையே கூடுமானால் |
தந்தையே கூடுமானால் இந்தத் துன்பம் என்னை விட்டகன்று போகச் செய்திடும் (2) ஆனாலும் என் வாழ்வில் உமது விருப்பம் ஒன்றே எப்போதும் எனக்கு நிகழட்டும் (2) சிதறிப்போன ஆடுகளை - ஒன்று சேர்க்க முனைந்தேன் பதறி ஓடித் தேடினேன் - அலைந்து அலைந்து சோர்ந்திட்டேன் நலிந்து போன ஆடு தன்னை தோளில் தூக்கிச் சுமந்திட்டேன் மெலிந்த ஆட்டுக்குட்டிகளை கிடையில் மெல்ல சேர்த்திட்டேன் கிடையினைத் சிதைக்கும் ஓநாய்கள் தொல்லை கடைசி வரைக்கும் ஓயவில்லை அரவணைக்கும் கரங்களுக்கு பரிசாக ஆணிகளோ அன்பு செய்யும் இதயத்தின் - ஆழம் காண ஈட்டியோ உண்மைக்கென்றும் சாட்சியாய் வாழ்ந்தவர்க்கு சாட்டையோ நன்மைகளை நாட்டுக்காய் செய்தவர்க்கு சிலுவையோ எந்தன் தந்தையே ஏன் என்னை இன்று இந்த நிலையில் கைவிட்டீரோ வேதனையில் வெந்து - நான் வீழ்கின்ற போதிலும் தனிமையில் போரிட்டு தவிக்கின்ற போதிலும் சோதனையில் நான் விழாது காத்திடும் தந்தையே தீமையில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டுமே உந்தன் கரங்களில் எந்;தன் ஆவிதன்னை ஒப்படைக்கிறேன் தந்தையே |