தவக்காலப்பாடல்கள் | 1507-பாடுகள் நீர் பட்டபோது |
பாடுகள் நீர் பட்டபோது பாய்ந்து ஓடிய இரத்தம் கோடி பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவீர்க வல்லதே கெட்டுப்போனோம் பாவியானோம் கிருபை செய் நாதனே மட்டில்லாக் கருணை என்மேல் வைத்திரங்கும் யேசுவே துஸ்ட யூதர் தூணினோடு தூய கைகள் கட்டியே கடுமையாய் அடித்தபோது கான்ற செந்நீர் எத்துணை சென்னிமேற் கொடிய யூதர் சேர்த்து வைத்த முண்முடி தன்னால் வடிந்த ரத்தத்தால் சர்வ பாவம் நீங்குமே நீண்ட இருப்பாணி கொண்டு நிஸ்டூரர் கை கால்களை தோண்டியபோது சொரிந்த தூயரத்தம் எத்துணை மெத்த குரோதத்தினாலே விலாவை ஓர் சேவகன் குத்தவே சொரிந்த ரத்தம் கொண்டே எம்மை மீட்பீரே ஐந்து காயத்தால் வடிந்த அரிய உமது ரத்தத்தால் மிஞ்சும் எங்கள் பாவந்தீர்க்க வேண்டுகிறோம் யேசுவே |