தவக்காலப்பாடல்கள் | 1504- கண்ணீர் நிறைந்த கிண்ணம் |
கண்ணீர் நிறைந்த கிண்ணம் காணிக்கை வைப்பேன் உமக்கே விண்ணோர் விருந்தில் இடம் பெறவே விரும்பி ஏற்பாய் இறைவா செல்வர்கள் வழங்கும் பணமும் இல்லை ஜெருசலேம் விதவைக் காசும் இல்லை உள்ளவை அனைத்தும் உமக்கே தருவேன் உடைந்த உள்ளமே அவை என்றறிவீர் வீட்டிலும் அமைதி சிறிதும் இல்லை வெளியிலும் சாந்தி அறவே இல்லை வாழ்க்கையில் புயலே வீசிடக் கண்டேன் வழங்க உம்மிடம் கொணர்ந்தேன் இவையே வறுமையும் வெறுமையும் என்னிடம் உண்டு குறையும் துயரமும் மிகப் பல உண்டு இறைவன் நீரே ஈந்தீர் இவற்றை இரங்கி ஏற்பீர் ஏழை எனதை பாவமும் பழியும் பல நான் செய்தேன் பகலும் இரவும் இவைகளைச் செய்தேன் கோவிலில் வந்தேன் கொடியேன் கலங்கி கொடுத்தேன் உம்மிடம் உள்ளம் கரைந்தே |