தவக்காலப்பாடல்கள் | 1502 -கல்வாரிப் பாடத்தை |
கல்வாரிப் பாடத்தை கற்றுத் தரவேண்டும் கற்றிட்ட பாடத்தை வாழ வரம் வேண்டும் இகழ்ச்சியோ புகழ்ச்சியோ எது எனை அடைந்தாலும் மலர்ச்சியோ மனத்துயரோ எது எனை ஆண்டாலும் எனக்கென்று நான் கொண்ட அனைத்துமே பிரிந்தாலும் எனக்கென்று நீயுண்டு எல்லாம் தருகின்றேன் - 2 உலகத்தோடு எனை இணைக்கும் உறவுகள் அனைத்தையும் உள்ளத்தோடு எனை இணைக்கும் நினைவுகள் அனைத்தையும் உழைப்பினில் நான் கொள்ளும் துன்பங்கள் அனைத்தையும் உன்னிடமே படைக்கின்றேன் எல்லாம் தருகின்றேன் - 2 உலகமே வெறுத்தெனை ஒதுக்கியே வைத்தாலும் கலகமே என் வாழ்வில் நிறைந்து வதைத்தாலும் மலர்ந்திடும் அமுதவாய் புன்னகை போதுமையா கவர்ந்திடும் என்தலைவா எல்லாம் தருகின்றேன் - 2 |