தவக்காலப்பாடல்கள் | 1500 -இரக்கம் நிரம்பும் இறையருட்காலம் |
இரக்கம் நிரம்பும் இறையருட்காலம் ஓப்புரவில் உறவே காணும் ஆற்றல் தரும் வசந்தகாலம் அருள் மிகும் நிம்மதி சேரும் மனம் குணம் இறைநெறி காணும் மனிதனாக மாறிட மனமாற்றம் தேவையே இதயத்தை நாம் கிழித்திடுவோம் புத்துயிர் பெறுவோம் இறையரசின் காலம் மிக அருகில் உள்ளது நற்செய்தி கேட்டு நாமும் திருந்தி வாழ்வோம் ஜெபமும் தவமும் தினமும் செய்யவே வளமும் வரமும் பெருகி வருகுதே உலகை மாற்ற எண்ண வேண்டாம் நம்மை மாற்றுவோம் முழுமனித வாழ்க்கையே இறை மகிமை என்போம் தன்னலங்கள் மறந்து பிறர் வாழ உழைப்போம் தரணி வந்த தலைமகனின் தலைமையில் செல்வோம் அமைதி தூதனாய் அன்பின் கருவியாய் விண்ணின் மைந்தனாய் மண்ணில் மலருவோம் |