தவக்காலப்பாடல்கள் | -இயேசுவின் பின்னால் நானும் |
இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் திரும்பிப் பார்க்க மாட்டேன் - 2 சிலுவையே முன்னால் உலகமே பின்னால் இயேசு சிந்திய குருதியினாலே விடுதலை அடைந்தேனே அச்சமுமில்லை அதிர்ச்சியுமில்லை அடியேன் உள்ளத்திலே ஆண்டவர் யேசு அடைக்கலப் பாறை ஆதலின் குறையில்லை ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால் அன்பர் யேசுவின் வார்த்தையினாலே விடுதலை அடைந்தேனே தாயும் அவரே தந்தையும் அவரே தரணியில் நமக்கெல்லாம் சேயர்கள் நம்மை செவ்வழி நடத்தும் ஆயனும் அவரன்றோ ஆயனே முன்னால் அலகையே பின்னால் அழைக்கும் யேசுவின் அன்பு மொழியாலே ஆறுதல் அடைந்தேனே |