Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புதுவருடப் பாடல்கள் மானிலத்தோரே பாடுங்கள்  



மானிலத்தோரே பாடுங்கள்
கடவுளைப் போற்றிப் புகழுங்கள்
புதியதோர் ஆண்டு பிறந்ததே
புத்துணர்வு நம்மில் மலருதே
ஆண்டவரைப் பாடுங்கள் - அவரது
பெயர் சொல்லி வாழ்த்துங்கள்

வானங்கள் யாவும் மகிழட்டும்
பூவுலகும் களி கூரட்டும்
கடலலையும் அதில் யாவையும்
ஆர்ப்பரித்தே புகழ் பாடட்டும்
வயல் வெளியும் அதில் விழைவனவும்
கடவுளின் புகழ் பாடட்டும்
மூவுலகாளும் நீதியின் தேவன்
ஆட்சியை இன்று மலர்ந்திடும்
சொல்லுறுதி கொண்டு ஆளுவார்

வார்த்தை மனுவுருவாகினார்
நம்மிடையே குடிகொண்டுள்ளார்
தம்மை ஏற்கும் அனைவருக்கும்
இறைமக்களாகும் உரிமை கண்டார்
நம் மீது இரங்கி வந்து
ஆசீரை அளித்திடுவார்
திருமுகத்தின் பேரொளியை
அனைவருக்கும் ஈர்த்திடுவார்
உலகோரும் மெய்வழி உணருவார்











 

மலர்ந்தது மலர்ந்தது அருள் வருடம்
இறைவனின் நன்கொடை இவ்வருடம்