Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புதுவருடப் பாடல்கள் இறைவனின் கருனை புதுவருடம்  



இறைவனின் கருனை புதுவருடம் - நாம்
புதிதாய் பிறந்தோமே
காரிருள் மறைந்துமே புது ஐனனம் - நல்
விடியலில் நுழைந்தோமே
இனி எல்லாம் சுகம் சுகமே - இனி
எல்லாம் நலம் நலமே - புவி
எங்கும் சுபம் சுபமே
புலர்ந்தது புத்தாண்டு

Happy Happy NewYear - Merry Merry NewYear
Happy NewYear - Merry NewYear
Happy Happy NewYear


கனவுக்கூடுகள் உடைத்தின்று
பட்டாம் ச்சியாய் சிறகசைப்போம்
மூங்கில் தடைகளில் துளைகளிட்டு
குழலாய் இசையமைப்போம்
இறை சித்தம் உருவாக நமைத் தந்து
புதிதாய் பிறந்திடுவோம்
இறை சித்தம் நிறைவேற நமைத் தந்து
புதியதோர் உலகு செய்வோம்.

பழைய காயங்கள் மறந்து விட்டு
புதிய பாதையில் தடம் பதிப்போம்
கடந்த காலத்தின் நல்லதையே
புதுமையாய் உருவமைப்போம்
இந்த உலகம் அமைதியிலே களித்திடவே
ஒன்றாய் இணைந்திடுவோம்
இறை கனவு நனவாக ஓர்குலமாய்புதியதோர் உலகு செய்வோம்








 

மலர்ந்தது மலர்ந்தது அருள் வருடம்
இறைவனின் நன்கொடை இவ்வருடம்