Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புதுவருடப் பாடல்கள் விடிந்தது இன்று புதிய ஆண்டு  
விடிந்தது இன்று புதிய ஆண்டு
இறைவனின் கொடையினால்
ஆடுவோம் பாடுவோம்
ஓரினமாய் கொண்டாடுவோம்

Happy Newyear Happy Newyear
We Wish your Happy Newyear

வேற்றுமைகள் இல்லா புது உலகம் படைப்போம்
அயலாரை அன்பு செய்து இயேசுவைப் பின் செல்வோம்
வாழ்வு தரும் நற்செய்தியை எங்கும் பறை சாற்றுவோம்
இறைவார்த்தை வாழ்வாக்கி இறையரசை அமைப்போம்

உண்மையாம் இறைவனிலே ஒன்றாய் இணைவோம்
ஏழையோடு பகிர்ந்துண்டு சமத்துவம் நாம் காண்போம்
என்றுமுள்ள தேவனின் பேரன்புக்காக  - அனுதினமும்
நன்றி சொல்லி இறைவனைத் தொழுதிடுவோம்















 

மலர்ந்தது மலர்ந்தது அருள் வருடம்
இறைவனின் நன்கொடை இவ்வருடம்