புதுவருடப் பாடல்கள் | புத்தொளி வானில் தெரியுது |
புத்தொளி வானில் தெரியுது வாருங்கள் வந்து பாருங்கள் புதியதோர் ஆண்டிங்கு பிறக்குது வாழ்த்துங்கள் வாழ்த்திப் பாடுங்கள் இன்றும் என்றும் நம்மைக் காப்பவன் - இறைவன் எந்த நாளும் நல்ல தலைவன் புத்தொளி வானில் தெரியுது HAPPY HAPPY NEWYEAR புதியதோர் ஆண்டிங்கு பிறக்குது MARRY MARRY NEWYEAR மறைந்தது இனி மலருமா - மலருமா மலர்ந்தது சுகம் பெருகுமா - பெருகுமா என்னென்று நாம் சொல்வது இறைவன் கைவண்ணம் நாம் கண்டது நமது கையில் எதுவுமில்லையே - அவனை நம்பினோர் கெடுவதில்லையே அனுபவம் தந்த பாடங்கள் - பாடங்கள் தமிழ் வாழ்வுக்கு அச்சாணிகள் - அச்சாணிகள் எதுவந்த போதிலுமே - இறைவன் கை நம்மைக் தாங்கிடுமே இன்ப துன்பம் வாழ்வினில் உண்டு அந்த இரண்டிலுமே நன்மையும் உண்டு |