Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புதுவருடப் பாடல்கள் புதிய நல் ஆண்டு  
புதிய நல் ஆண்டு புலர்ந்திடும் வேளை
ஒன்றாய் நாமும் மகிழ்ந்திடும் வேளை
இறைவன் நம் இல்லம் வருவார்
நம்மைக் காத்திடுவார் -2
பாடுவோம் பாடுவோம் நாம் இணைந்து
பாரினில் தினம் அவர் பண் இசைத்து
*Happy New Year -4
Happy Happy Happy New Year*


ஆண்டவர் கட்டளை இதயத்தில் ஏற்றால்
ஆயுளும் நலனும் நாம் பெறுவோம்
உண்மையும் அன்பும் அணிந்து கொண்டால்
மனிதரின் மதிப்பை நாம் பெறுவோம்
முழுமனதோடு ஆண்டவரை
நம்பியே அவரை மனதில் வைத்து
அனைத்தும் செய்தால் அவரே என்றும்
வழியாவார் நம் துணையாவார்-2
*Happy New Year -4
Happy Happy Happy New Year*


எங்களுக்கு மற்றவர் செய்ய நினைப்பதே
நாங்களும் அவருக்கு செய்வோமே
இறைவாக்குகளும் திருச்சட்ட நூலும்
சொல்வது நமக்கு இதுவன்றோ
எப்பொழுதுமே நாம் மகிழ்வாக
அவருடன் இணைந்து ஜெபம் செய்து
நன்றி சொன்னால் அவரே என்றும்
அரணாவார் நம் பலமாவார்-2
















 

மலர்ந்தது மலர்ந்தது அருள் வருடம்
இறைவனின் நன்கொடை இவ்வருடம்