புதுவருடப் பாடல்கள் | புதிய ஆண்டிலே |
புதிய ஆண்டிலே புதிய நாளிலே இறைவனை நாம் புகழ்வோம் புதுமை செய்தவர் புனிதம் தந்தவர் எந்நாளும் போற்றிடுவோம் இனி கவலை நீங்கி நாம் வாழ்ந்திடுவோம் நம் கண்ணீரெல்லாம் துடைப்போம் நம் தேவன் இயேசுவின் துணையுடனே புது நம்பிக்கை நாம் பெறுவோம் இனிய நாளில் புது எண்ணங்களை நாம் எழுப்பிடுவோம் - இந்த இனிய நாளில் புது எண்ணங்களை நாம் எழுப்பிடுவோம் We Wish you a Happy New Year (3) Happy New Year புதுமை என்பது ஏதுமில்லை - நம் மனதில் தோன்றிடும் நம்பிக்கையே - நாம் வளமை என்பது உயர்வு இல்லை இருப்பதில் காணும் நிறைவினிலே முகமுகமாய் நம் அயலாரை சந்தித்து வாழ்த்திடுவோம் பழைய நினைவுகள் காயங்களை மன்னித்து மறந்திடுவோம் நம் பாலன் இயேசு விரும்பும் பாதையில் புதிய ஆண்டிலே தடம் பதிப்போம் - (2) We Wish you a Happy New Year (3) Happy New Year உலகில் வாழ்ந்திடும் யாவருமே - நம் உறவுகள் என்றே நினைத்திடுவோம் உலவும் எழிலான இயற்மையிலே - நம் இறைவனையே தினம் கண்டிடுவோம் வறுமையில் வாடும் உள்ளங்களை அன்பாலே மீட்டெடுப்போம் பகிர்ந்து வாழ்வதே மகிழ்வென்று எல்லோரும் கொண்டாடுவோம் நம் பாலன் இயேசு விரும்பும் பாதையில் புதிய ஆண்டிலே தடம் பதிப்போம் - (2) We Wish you a Happy New Year (3) Happy New Year |