புதுவருடப் பாடல்கள் | புத்தம் புது நல் ஆண்டிதுவே |
புத்தம் புது நல் ஆண்டிதுவே வளமை காண்போம் நம் வாழ்வினிலே உறவில் மகிழ்ந்து மனிதம் கண்டு உண்மை வாழ்வில் நிலைத்திடுவோம் Happy Newyear Happy Newyear Happy Newyear Happy Newyear கருவினில் தேர்ந்தெடுத்து காலம் யாவும் வழி நடத்தி நிலைத்தார் நம்மிலே நாளும் நாம் மகிழ்வோடு வாழும் நாளில் நிறைவோடு வாழ்வோம் அவரிலே (2) என்னை அழைத்தார் எம் தந்தையே உன் அருகில் நான் வாழவா உன் அன்பே எல்லை உறவில் ஆதாயம் என் அர்ப்பணம் உன்னிடமே (2) மாண்பினில் நாம் வாழ ஆசிகளை நாம் ஏற்க நாடுவோம் நாதனை உலகம் உய்வுபெற அமைதி என்றும் காண வேண்டுவோம் தேவனை (2) அவர் ஆற்றல் நாம் அணிவோம் வெற்றி முரசே நாம் கொட்டுவோம் இறை மகிழ்வு காண நல் மனிதம் ஓங்க நல் வாழ்த்தினை நாம் பகிர்வோம் (2) |