புதுவருடப் பாடல்கள் | புத்தாண்டு மலர்ந்தது |
புத்தாண்டு மலர்ந்தது பூமியிலே புது விடியல் புலர்ந்தது மனங்களிலே தந்தை இறைவனின் அன்போடும் மைந்தன் இயேசுவின் அருளோடும் தூய ஆவியின் துணையோடும் புத்தாண்டை வரவேற்போம்-2 நாம் Happy happy new year, happy happy new year We wish you all a very happy and a prosperous New year-2 ஆண்டின் அனைத்து நாட்களும் எமக்கு புது நாள் ஆகிட வேண்டும் நலமும் வளமும் அமைதியும் மகிழ்வும் வாழ்வில் நிறைந்திட வேண்டும் -2 அன்பும் பகிர்வும் எங்கள் வாழ்வின் பண்புகள் ஆகிட வேண்டும் -2 அனைத்திலும் உயர்வாய் என்றும் நிறைவாய் இறைவா உமதருள் வேண்டும் -2 உலகினை அழித்திடும் தீமைகள் அழிந்து நன்மைகள் மலர்ந்திட வேண்டும் உழைப்பின் பலனை உழைப்பவர் கண்டு உயர்வை அடைந்திட வேண்டும்-2 உண்மையும் நீதியும் ஒற்றுமை உணர்வும் உள்ளத்தில் நிறைந்திட வேண்டும் -2 அனைத்திலும் மேலாய் இறைவா உமது அன்பை பொழிந்திட வேண்டும் -2 - Happy happy |