Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புதுவருடப் பாடல்கள் 1499-புதிய ஆண்டு பிறந்தது  

புதிய ஆண்டு பிறந்தது பிறந்தது
புத்துலகம் இன்று மலர்ந்தது மலர்ந்தது
நாளும் கொண்டாடுவோம் நம்பிக்கைப் பண்பாடுவோம்
நாடும் வீடும் நலமாய் வாழ வேண்டுதல் செய்திடுவோம்
நல்லதை எண்ணி நலமே காண வாழ்வில் முனைந்திடுவோம்

உழைப்பும் முயற்சியும் வெற்றியின் அடிக்கல்
அயராதுழைத்திடுவோம்
பசித்தால் உண்டு களைத்தால் உறங்கி 
நேரத்தை செலவழிப்போம்
இருப்பதைக் கொண்டு இல்லாதவர்க்கு
கொடுத்திட முன்வருவோம்
மகிழ்ச்சியே பொங்கும் சமுதாயம் மலர 
இயன்றதை செய்திடுவோம்
வாழ்வது சிலநாள் வளமாய் வாழ்வோம்
வாழ்வுகள் மலரச் செய்திடுவோம்

தீவிரவாதம் வன்முறைக்கோலம்
அழிவினைத் தேடிச்செல்லும்
சாகசப் பேச்சும் சகுனியின் மூச்சும் 
பிரிவினை நாடச்சொல்லும்
அன்பும் பரிவும் அணிகலனாக 
இதயங்கள் உறவாகும்
போர்ப்பகை மறந்து உலகமே வாழ 
உதயங்கள் வரவாகும்
வாழ்வது சிலநாள் வளமாய் வாழ்வோம்
வாழ்வுகள் மலரச் செய்திடுவோம் - 2




 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா