புதுவருடப் பாடல்கள் | 1498-புத்தாண்டே வருக வருகவே |
புத்தாண்டே வருக வருகவே - இந்த பூமி எங்கும் வளங்கள் பெருகவே புதிய ஆண்டதின் பிறந்த நாளிலே. புதிய உறவிலே மகிழ்ந்து வாழவே. ஒன்று கூடி உளம் மகிழ வாழ்த்துக் கூறுவோம் Happy Happy Happy Newyear (2) அருளும் பொருளும் தந்து என்றும் நம்மைக் காக்கவே இறைவன் ஆசி அருளும் புதிய இனிய ஆண்டிது உறவின் கரங்களாக ஒன்று கூடுவோம் (2) உரிமைகளைப் பெற்று நாமும் மகிழ்ந்து வாழுவோம் மனித நேயம் மண்ணில் நாளும் ஓங்கி உயரவே புனிதம் மனதில் மலரும் நல்ல புதிய ஆண்டிது அன்பின் பாதையிலே பயணமாகுவோம் (2) பாரினிலே சாட்சியாக கூடி வாழுவோம். |