புதுவருடப் பாடல்கள் | 1496-புத்தம் புது உலகம் ஒன்றை |
புத்தம் புது உலகம் ஒன்றைக் காண நம்மைப் படைத்தார் நித்தம் புதுஉறவில் அதனைக்காண நம்மை அழைத்தார் முத்தான உள்ளங்கள் சேர்ந்து உறவை ஆக்கவே பூத்துச் சிரிக்கும் மலராய்நாளும் வாழ்வை மாற்றவே நெஞ்சில் நீயே யேசு தேவா ஆளவருகவே துஞ்சும் உலகை வாழவைக்கும் உறவை வளர்க்கவே அழவேண்டாம் எனும் சொல்லால் ஆறுதல் காண எம் நெஞ்சில் நீயே உம் அன்பில் வளருவோம் விழவேண்டாம் எனும் சொல்லால் பாவம் நீக்கிட பிறமனிதரோடு நல் உறவில் வளருவோம் குழல் விஞ்சும் குழந்தையாக உறவு கொண்டிட நிழல் போன்று எமைத் தொடரும் தீமை வெல்லுவோம் பொருள் இல்லா ஏழையுடன் பகிர்ந்து வாழ்ந்திட எம் நெஞ்சில் நீயே உம் அன்பில் வளருவோம் பொருள் இல்லா வாழ்வினுக்கு நோக்கம் அளித்திட பிறமனிதரோடு நல் உறவில் வளருவோம் இருள் கொண்ட மனங்களிலே ஒளியை வீசிட அருள் கொண்டு நீதியுடன் அமைதி காணுவோம் |