புதுவருடப் பாடல்கள் | 1494-பிறந்தது பிறந்தது புது வருடம் |
பிறந்தது பிறந்தது புது வருடம் மலர்ந்தது மலர்ந்தது அருள் வருடம் இறைவனின் நன்கொடை இவ்வருடம் வாழ்வில் நாளும் வளம் பெறுவோம் வருடங்களை நன்மையினால் முடிசூட்டி அருள்வாரே வாழ்வில் வரும் துன்பங்களை வல்லமையோடே அகற்றிடுவார் கண்மணிபோலே கருவறைத் தாயாய் மண்ணில் நம்மை மறவாரே வருத்தும் உலகக் கவலைகள் எல்லாம் வாழ்வில் நின்றே மறைந்துவிடும் 2 உயர்ந்த மலையில் இருந்தே உதவிகள் நம்மையே தேடி வந்திடுமே வானமும் வையமும் படைத்த தேவன் வாழ்நாள் முழுதும் உதவிடுவார் வாதை உந்தன் கூடாரமென்றும் வந்திடாமல் காத்திடுவார் காலந் தோறும் கரங்களில் நம்மை ஏந்தி என்றும் நடத்திடுவார்; 2 |