புதுவருடப் பாடல்கள் | 1493-இறைவனின் கருணை |
இறைவனின் கருணை புதுவருடம் - நாம் புதிதாய் பிறந்தோமே காரிருள் மறைந்துமே புது ஐனனம் - நல் விடியலில் நுழைந்தோமே இனி எல்லாம் சுகம் சுகமே - இனி எல்லாம் நலம் நலமே - புவி எங்கும் சுபம் சுபமே புலர்ந்தது புத்தாண்டு Happy Happy NewYear - Merry Merry NewYear Happy NewYear - Merry NewYear Happy Happy NewYear கனவுக்கூடுகள் உடைத்தின்று பட்டாம் பூச்சியாய் சிறகசைப்போம் மூங்கில் தடைகளில் துளைகளிட்டு குழலாய் இசையமைப்போம் இறை சித்தம் உருவாக நமைத் தந்து புதிதாய் பிறந்திடுவோம் இறை சித்தம் நிறைவேற நமைத் தந்து புதியதோர் உலகு செய்வோம். பழைய காயங்கள் மறந்து விட்டு புதிய பாதையில் தடம் பதிப்போம் கடந்த காலத்தின் நல்லதையே புதுமையாய் உருவமைப்போம் இந்த உலகம் அமைதியிலே களித்திடவே ஒன்றாய் இணைந்திடுவோம் இறை கனவு நனவாக ஓர்குலமாய் புதியதோர் உலகு செய்வோம் |