Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புதுவருடப் பாடல்கள் 1492-அருள்தரும் ஆண்டே வருக  
அருள்தரும் ஆண்டே வருக
வருக வருக வருக
அருள்தரும் ஆண்டே வருக - 2
எங்கள் அகம்தனில் அருள்மிகப் பொழிய வருக
ஆனந்தம் அமைதியைத் தருக
அருள்தரும் ஆண்டே வருக

அகிலத்தின் மீட்பன் அவனியில் பிறந்து
ஆண்டுகள் இரண்டு ஆயிரம் கனிந்து - 2
வருகின்ற ஆண்டே பேறுபெற்றாய் - 2
உன்னை வாழ்த்திட நாங்கள் பேறுபெற்றோம் - உன்னில்
வாழ்ந்திட நாங்களும் பேறுபெற்றோம்
நலமும் குணமும் கொண்டு வருக
நம்பும் யாவும் வென்று தருக - 2
ஏழை மானிடர் துயரம் தீரட்டும்
மாதர் மழலையர் துன்பம் ஓயட்டும்

வறியவர் தடங்கள் மறைந்திடவும்
அனைவரும் கடமைகள் தொடர்ந்திடவும் - 2
புதிய நல்வாழ்வு தொடங்கிடவும் - 2
வரும் அரியதோர் வாய்ப்பே நீ வருக - 2
அறிவும் கலையும் கொண்டு வருக
அழகும் எழிலும் இங்கு தருக - 2
அகிலம் யாவிலும் அமைதி வாழட்டும்
அன்பு அருவிபோல் பொங்கி பாயட்டும்

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா