புதுவருடப் பாடல்கள் | புதிய ஆண்டு நமக்காய் இன்று |
புதிய ஆண்டு நமக்காய் இன்று சுடராய் ஒளிர்கின்றதே புது நம்பிக்கை தீபங்கள் ஏற்றுவோம் இறை அன்பின் வாழ்விலே மகிழ்வோம் HAPPY NEW YEAR 4 நீதியும் நேர்மையும் தழைக்க இங்கு சமத்துவ சமுதாயம் படைப்போம் 2 வேற்றுமை பிரிவினை ஒழிய இன்று இறைவனின் அருளுரை கேட்போம் இயேசுவே ஆண்டவர் மீட்பரவர் என்பதை உலகெல்லாம் உரைப்போம் புது ஆண்டில் சபதம் ஏற்போம் 2 HAPPY NEW YEAR 4 இறைவனில் நம்பிக்கை நிறைய இறை அன்னையின் பரிந்துரை ஏற்போம் 2 மனிதனின் குறைகளை களைய நாம் புனிதர்கள் வாழ்வினை வாழ்வோம் 2 மூவொரு இறைவனில் நம்பிக்கை மிகுந்திட யாவரும் சாட்சியாய் வாழ்வோம் இந்த ஆண்டில் உறுதி ஏற்போம் HAPPY NEW YEAR 4 |