கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | செல்லமாய் ஒரு செல்லன் |
செல்லமாய் ஒரு செல்லன் பிறந்தார் பார்ப்போம் வாங்க பிள்ளையாய் நம் உள்ளம் எழுந்தார் துதிப்போம் வாங்க ஆலயமணிகள் ஆர்ப்பரிக்க ஆலயம் நாமும் விரைவோமே ஆதவன் இயேசுவின் பிறப்பினிலே ஆனந்தமாய் நாம் மகிழ்வோமே மார்கழி இரவின் குளிரினிலே மாடுகள் அடையும் தொழுவத்திலே மேன்மையாய் இயேசு பிறந்துள்ளார் மனிதருள் புனிதனாய் வளர்ந்துள்ளார் இதயத்தின் கதவினை திறந்திடுவோம் இறைமகன் நுழைந்திட வழிவிடுவோம் வார்த்தையாம் இயேசு பிறந்துள்ளார் வாழ்வினை மாற்றிட முயன்றிடுவோம் வானக தேவரின் வரவினிலே வாழ்வினை வளர்க்கும் உறவினிலே ஆனந்தமாய் நாம் நுழைந்திடுவோம் இறைவனின் இல்லமென இணைந்திடுவோம் புதியதோர் வாழ்வினை ஏற்றிடுவோம் ஒருமன உணர்வாய்த் திரண்டிடுவோம் புத்தொளி மனதினில் ஏந்திடுவோம் பிறப்பது மகிழ்வென உரைத்திடுவோம் |