கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | விண்மலர் பூத்தது பூமியில |
விண்மலர் பூத்தது பூமியிலே மணமும் தந்தது தென்றலிலே யேசு பிறந்தது தொழுவத்திலே எளிமை என்னும் வடிவத்திலே பிறந்தநாள் இன்று பிறந்தநாள் - (2) பாலன் பிறந்தநாள் தேவன் பிறந்தநாள் (2) விண்ணவர் பாடிட மண்ணவர் வாழ்த்திட ஆடுகள் சூழ்ந்திட இடையர்கள் கூடிட - (2) பனிவிழும் இரவில் மரியன்னை மடியில் இறைமகன் பாலனாய் பிறந்தார் இன்று - (2) அருள்வழி தோன்றியது இருள் திரை அகன்றது புனிதம் மலர்ந்தது மாட்சிமை நிறைந்தது (2) மங்களப் பொழுதில் மௌனத்தின் இரவில் உன்னதப் பாலன் பிறந்தார் இன்று - (2) |