கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | சின்னஞ்சிறு ரத்தினமே |
சின்னஞ்சிறு ரத்தினமே சிரிக்கும் செவ்வந்தி பூச்சரமே என்ன சொல்லி உன்னை அள்ளி தாலாட்டுப் பாடுவேன் - 2 எல்லாம் இழந்து வந்தவரே மழலையான மன்னவரே மாட்டுத் தொழுவில் மாணிக்கமே வண்ணப் பூமழையே வான் அழகே வையம் வந்ததா சின்ன கூட்டுக்குள்ளே வெண்ணிலவு தஞ்சம் கொள்வதா மின்மினி போலவே விண்மீன்கள் சூழவே கண்மணி கோலமே - அந்த தெய்வம் பிறந்ததா அருளே அழகாய் ஆளவந்ததா இருளே நிழலாய் வீழ வந்ததா அக இருளினிலே இருப்பவர்க்கு ஒளியைத் தந்திட நம் காலடியை அமைதி வழி நடத்தி சென்றிட இரவின் மடியிலே புது விடியல் தவழுதா இறைவன் இரக்கமே அள்ளித்தந்த பரிசிதா மரியின் மகனே ஆரிராரிரோ மதிமுகமே மலர்வனமே ஆராரிரோ |