Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் பாரெங்கும் மகிழ்ந்து ஆட  


பாரெங்கும் மகிழ்ந்து ஆட விண் தூதர் இசைந்து பாட
சின்னஞ்சிறு பாலகனாய் மண்ணில் வந்த மன்னவனாம்
அன்னைமரி பாலகனைப் போற்றிடுவோம் (2)
விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற
தேவமைந்தன் இன்று பிறந்தார் (2)

மேய்ப்பருக்கு வானதூதர் செய்தி சொல்லவே
பாலகனைக் காண அவர் சென்றனரே
கந்தை துணி கோலமாக முன்னணையின் மீதினிலே
உலகத்தின் இரட்சகரைத் தொழுதனரே
சின்னஞ்சிறு பாலகனாய் மண்ணில் வந்த மன்னவனாம்
அன்னைமரி பாலகனைப் போற்றிடுவோம் (2)
விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற
தேவமைந்தன் இன்று பிறந்தார் (2)

வானத்தில் விடிவெள்ளி தோன்றியதே
தேவமகன் பிறப்பினைக் கூறியதே
ஞானிகளும் பின் சென்று காணிக்கைகள் கொண்டு சென்று
இயேசு பாலன் முன்பாகப் பணிந்தனரே
சின்னஞ்சிறு பாலகனாய் மண்ணில் வந்த மன்னவனாம்
அன்னைமரி பாலகனைப் போற்றிடுவோம் (2)
விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற
தேவமைந்தன் இன்று பிறந்தார் (2)





 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா