கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | இரவு நல்ல இரவ |
இரவு நல்ல இரவு இறைவன் தந்த இரவு தூய்மையான இரவு இன்னல் தீர்த்த இரவு பாடுங்கள் எல்லோரும் பாடுங்கள் தேடுங்கள் தேவனைத் தேடுங்கள் - ஆகாகா அன்னையின் மடியிலே அழகு செல்வமாம் அகிலமே ஆழ வந்த அன்பு தெய்வமாம் வாருங்கள் அனைவரும் வாழ்த்திப் போற்றுவோம் வானவன் பிறந்தது வாழ்வு வந்தது வையகம் கண்டது வாழ்த்துச் சொன்னது பனிமலை பொழிந்தது பாடம் தந்தது பாரெல்லாம் பரமனை பாடித் துதித்தது |