கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் |
சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் அன்னைமரி ஈன்றெடுத்த தேவன் விண்ணுலக மண்ணுலக வேந்தன் என்னில் இன்று மலர்ந்த இராஜன் பிறந்த நாள் இன்று பிறந்த நாள் பாலன் பிறந்த நாள் ஹேப்பி கிறிஸ்மஸ் டு யூ மெர்ரி கிறிஸ்மஸ் டு யூ தாவீதின் வம்சம் லாலா யூதாவின் சிங்கம் லாலா பெத்லஹேம் ஊரில் பிறந்தது ஆயர்கள் கூட்டம் லாலா விண்மீன்கள் ஆட்டம் லாலா மீட்பரைக் கண்டு துதித்தது நீதி நேர்மை வளர்ந்திடவே நிம்மதி வாழ்வில் மலர்ந்திடவே வாழ்வின் பொருளைக் காட்டிடவே வளமை யாவும் கூட்டிடவே ஆதி முதல்வன் அன்பின் கலைஞன் அமைதியின் மன்னன் தோன்றிவிட்டார் சங்கத்தமிழ் பாட்டில் லாலா சந்தங்களைச் சேர்த்து லாலா செங்கமல வண்டுறங்க சிந்து பாடுவோம் மங்களங்கள் பொங்க லாலா நெஞ்சமதில் வந்த லாலா தங்கச்சுடர் மன்னவனைத் தாலாட்டுவோம் தூங்கும் விழிகள் ஒளிகாணவே இங்கு கதிரவன் உருவானதே ஏங்கும் மனங்களின் உறவாகவே தங்கி வாழ்ந்திட உயிரானதே வங்கக்கடலே பொங்கும் அமுதே இன்பமழையே ஆராரிரோ |