கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | ஆராரோ பாடுங்கள் |
ஆராரோ பாடுங்கள் அகிலமெல்லாம் கூறுங்கள் ஆதவன் இயேசு பிறந்தாரென்று அல்லேலூயா பாடிடுங்கள் - (4) அன்னை மரியின் சின்னப் பிள்ளை அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு வழியும், சத்தியமும், ஜீவனும் இயேசு --- அல்லேலூயா முன்னணையில் தவழ்ந்த இரட்சகரே எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே கண்மணி போல காப்பவரே காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே --- அல்லேலூயா |