கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | விரைந்து வாருங்கள் அன்பு மாந்தரே |
விரைந்து வாருங்கள் அன்பு மாந்தரே மகிழ்ந்து பாடுங்கள் இறைவன் புகழையே உலக மீட்பர் பிறந்த நாளிதுவே உலக மாந்தர் மகிழும் நாளிதுவே உன்னதத்தில் மாட்சி மண்ணகத்தில் அமைதி சோர்ந்துபோன உள்ளம் புத்துயிர் பெறவே வாடிப்போன நெஞ்சம் நிறைவு காணவே ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ... ஆயர்தம் மந்தையை காப்பதுபோல ஆண்டவர் தம் மக்களைக் காத்திடப் பிறந்தார் வெறுப்பைக் கண்ட மனங்கள் அன்பைச் சுவைக்கவே பகைமை கொண்ட குணங்கள் பரிவைக் காணவே ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ... அருளும் இரக்கமும் உடையவராக பொறுமையும் பேரன்பும் நிறைந்து பிறந்தார் |