கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | விண்ணின் வேந்தன் |
விண்ணின் வேந்தன் மண்ணில் பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம் வாய்மையானவர் வழியுமானவர் வியப்புடன் போற்றிடுவோம் அன்னையுள்ளம் கொண்டவர் முன்னணையில் பிறந்தார் கந்தைத்துணி கோலமாய் மீட்பரே பிறந்தார்! பிறந்தார்! அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார் 2 வாழ்வாயிருப்பவர் வாழ்வைத் தந்தவர் மாறும் உலகிலே மாறா நல்லவர் நேசகரம் நீட்டி நேசிக்கின்ற தேவன் பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன் அவரைப் பாடி மகிழ்வோம் அன்னையுள்ளம் தோளில் சுமப்பவர் தோழன் ஆனவர் பாரம் சுமக்கவே பாரில் வந்தவர் பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்க தேவ மகன் இங்கு பாலனாக தூங்க தூதர் வந்து பாட அன்னையுள்ளம் |